கூகுள் குட்டப்பா ஸ்டாலின்.. அண்ணாமலை பேசி பேசியே பாஜக மைனாரிட்டி அரசாகிவிட்டது.. செல்லூர் ராஜூ ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 1:10 pm

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவையில் அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்

அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியபோது, Google குட்டப்பா போல் ஸ்டாலின் நடக்கிறார் என்று கூறி நகைப்புள்ளாக்கினார் செல்லூர் ராஜு

எங்கள் குடும்பத்தில் எனக்குப் பிறகு யாரும் வர மாட்டார்கள் என்று பேட்டி கொடுத்தார்
ஆனால் தனது மகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப் போகிறாராம்

திமுகவின் கொள்கைகளையும் கொடியையும் பட்டி தொட்டி எல்லாம் தெரிய வைத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர்

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை நடிகர் என்றும் கூறும் அன்பரசன் காகித பூ நாடகத்தில் நடித்த கருணாநிதி ஒரு நடிகர் ஸ்டாலின் ஒரு நடிகர்

கட்சி ஆரம்பித்து புரட்சித்தலைவர் இருக்கும் வரை திமுகவால் கோட்டைக்கு வர முடிந்ததா ?

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை பேசிப் பேசியே காவி கலரை மாற்றி விடுவார்.இனிமேல் அதிமுக தலைமை ஏற்க நாங்கள் விரும்ப மாட்டோம் எங்களிடம் வந்து கேட்டு பெற வேண்டும்.இது போல் நிலைமை வந்தால் நாங்கள் செத்து விடுவோம்

52 கால திராவிட ஆட்சி தான் பொற்கால ஆட்சி . மத்தியில் ஆளும் மமதையோடும் வாய் கொழுப்போடும் பேசிப் பேசியே தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜக இன்று மைனாரிட்டி கட்சியாக மாறிவிட்டது இப்படிப்பட்ட தலைவர்கள் இருப்பதால் தான் இவ்வாறு பேசினார்

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!