அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் எல்லாம் கிடையாது… நாங்குநேரி காவலர் மீது நடவடிக்கை எடுங்க ; போக்குவரத்துத்துறை..!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 12:58 pm

நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பேருந்தில் டிக்கெட் எடுக்க முடியாது என காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் நாங்குநேரி நீதிமன்றம் முன்பாக காவலர் ஒருவர் ஏறி உள்ளார். அப்போது, நடத்துனர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்தக் காவலர், அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் கிடையாது, என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: மேற்கு வங்கத்தில் கிடந்த பக்கத்து நாட்டு எம்பியின் உடல்… கொலையா செய்யப்பட்டாரா..? இருநாடுகளிடையே பரபரப்பு..!!

அப்போது நடத்துனர் காவலரிடம், “அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுத்துதான் ஆக வேண்டும்,” எனக் கூறினார். ஆனால், அந்த காவலர் அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லையென தெரிவித்துள்ளது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்து தான் பயணிக்க வேண்டும் என கூறியுள்ளது.

மேலும், நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 467

    0

    0