தமிழக அரசும் இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தணும்… மீனவர்கள் கைது நடவடிக்கை.. ராமதாஸ் சொன்ன யோசனை!
தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை , நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இரண்டு படகுகளுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகம் அழைத்து சென்றுள்ளது.
சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கைதான மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காகவே இலங்கை கடற்படை கைது செய்கிறது. தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது.
இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
This website uses cookies.