பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டிய தமிழக அரசு.. ஆனா ஒரு கண்டிஷன் : ஆதீனங்களுக்கு அமைச்சர் சேகர் பாபு வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2022, 4:01 pm

தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மேலும், தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்தார். மேலும், அண்மையில் தமிழக ஆளுநர் தருமபுர ஆதீன மடத்துக்கு சென்றதே தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம் எனவும் மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.

இதனிடையே நேற்று ஆதீனங்கள் அனவைரும் ஒன்று சேர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதன் பின்னர் முதலமைச்சர் பட்டிணப் பிரவேசத்திற்கு வாய்மொழி அனுமதி அளித்துள்ளார் என ஆதீனங்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து வரும் 22- ஆம் தேதி, பட்டண பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதனிடையே இனி வரும் காலங்களில் பட்டின பிரவேசத்திற்கு மாற்றாக வேறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய அனைத்து ஆதீனங்களுக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Sathyaraj family political problem கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!