‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்’… பிரஷ்ஷே பயன்படுத்தாமல் உதயநிதியின் உருவத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்…!!

Author: Babu Lakshmanan
14 December 2022, 9:14 am

இன்று அமைச்சராக பதவியேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை ஓவிய ஆசிரியர் கிரீடத்தால் வரை அசத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் சு. செல்வம். இவர் பகுதிநேர ஆசியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக ஓவியத்தின் மூலம் பல்வேறு விதமாக தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், அவருககு வாழ்த்து சொல்லும் விதமாக, அந்த காலத்தில் மன்னர்கள் பதவியேற்பதற்கு தலையில் வைக்கும் கிரீடத்தை வைத்து உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்தார்.

நீர் வண்ணத்தில் கிரீடத்தை தொட்டு உதயநிதி ஸ்டாலின் உருவத்தை 10 நிமிடங்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

அமைச்சராக பதவி ஏற்பதற்ககு வாழ்த்து தெரிவிப்பதுடன், பகுதி நேர ஆசிரியர்களான எங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஓவியத்தை பார்த்த திமுகவினர் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?