ஆளுநர் விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் ஆகியோரை தொடர்ந்து ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் 3வது பாஜக நிர்வாகி இவராவார்.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், எதிர்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, நேற்று விருதுநகரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அதாவது, ஆளுநர் பதவி என்பது பாஜக தலைவர்களுக்கு ஆறுதல் பரிசு போல் ஆகிவிட்டதாகவும், பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது, எனவே தான் இங்கு உள்ள பாஜக தலைவர்களுக்கு ஆளுநர் பதவி தருவதாக கூறினார். மேலும், ஆளுநர் பதவிக்கு பாஜக தலைவர்களைத் தவிர தமிழ்நாட்டில் வேறு தகுதியானவர்கள் யாரும் இல்லையா?, என்றும் கேள்வி எழுப்பினார்.
அவரது இந்தப் பேச்சு பாஜகவினரிடையே கொதிப்படையச் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் ஒரு காலமும் பாஜகவால் காலூன்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டு, ஆளுநர் பதவியை தமிழக பாஜகவினருக்கு ஆறுதல் பரிசை போன்று வழங்குகிறார்கள் என்று சிபிஎம் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
2 சீட்டுக்கு பத்து கோடி பிச்சையெடுத்து பெற்றுக்கொண்ட அடிமைகள், ஆறுதல் பரிசு, காலூன்ற முடியாது என்றெல்லாம் புலம்புவது கேலிக்கூத்து. இந்தியாவில் கம்மிகளை, கம்யூனிசத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து கட்டியது பாஜக என்பதே வரலாறு, எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.