அண்ணா குறித்து சர்ச்சை… அண்ணாமலைக்கு எதிராக வழக்கு ; அறிக்கை விட்ட ஆளுநர் மாளிகை!!

Author: Babu Lakshmanan
13 May 2024, 4:58 pm

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து, சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இருதரப்புக்கு மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக அண்ணாமலை மீது சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ்மனுஷ் சேலம் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பினார். இதனை பரிசீலித்த தமிழக அரசு, அண்ணாமலை மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.

Annamalai Governor - Updatenews360

மேலும் படிக்க: எம்எல்ஏவை ஓங்கி அறைந்த நபர்… ஆதரவாக நின்ற பொதுமக்கள் ; வாக்குச்சாவடியில் பரபரப்பு..!!

இந்த நிலையில், அண்ணா குறித்து பேசியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 296

    0

    0