முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலையடைந்த நிலையில் தன் வெற்றிக்கு போராடியவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள், அசோக் நகர் அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், “31 ஆண்டு தொடர் போராட்டத்தில் எல்லாரும் துணை நின்றார்கள். அதே போல் பல விதங்களில் திருமாவளவனும் எங்களோடு துணை நின்றார். உள்துறை அமைச்சரை சந்திக்க வைத்தார். ஏற்கனவே வந்தோம். அவர் வெளிநாடு சென்றிருந்ததால் இப்போது தான் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிந்தது. கிடார் பரிசளித்தார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“எனக்கு மிகவும் பிடித்த கிடாரை பரித்தளவர் அண்ணன் திருமாவளவன். உணர்வுப்பூர்வமாக எங்கள் நியாயம் அறிந்து எங்களோடு நின்றவர் அண்ணன். நன்றி தெரிவிக்கிறோம்” இவ்வாறு பேரறிவாளன் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அற்புதம்மாளின் போராட்டத்தின் நியாயங்களை ஜனநாயக சக்திகள் உள்வாங்கிக் கொண்டு அவரோடு நின்றனர்.
மக்கள் போராட்டம், சட்டப் போராட்டம் இரண்டும் நடந்தது. இவருக்கும் குற்றத்திற்கும் தொடர்பில்லை என்பதே புலனாய்வு செய்தவர்கள் கண்டறியப்பட்டதே இவ்வழக்கின் திருப்புமுனையாகியது.
மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதைத்தான் அறிவின் விடுதலை தெளிவுபடுத்தியது. இதில் விமர்சிக்க எதுவுமில்லை. 100% சட்டப்பூர்வமாக அறிவு விடுதலையடைந்திருக்கிறார்.
ஜெ, இன்றைய முதல்வர் உட்பட அவரவர் அதிகாரத்திற்கு உட்பட்டு இந்த விடுதலைகாக உதவியிருக்கின்றனர்.தலைசிறந்த வழக்கறிஞர்களை நியமனம் செய்து வழக்கை திறம்பட நடத்தியது தற்போதைய தமிழக அரசு. நீதி வென்றது, அறம் வென்றது.பேரறிவாளன் நிரபராதி. அறிவு எதற்காக பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பது அவருக்கே தெரியாது. ஜனநாயக சக்திகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம் என பேசினார்.
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
This website uses cookies.