பரபரப்பை கிளப்பும் நீட் விலக்கு மசோதா விவகாரம்: 3 நாள் பயணமாக டெல்லி புறப்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி..!!
Author: Rajesh4 February 2022, 4:26 pm
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 7ம் தேதி 3 நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை நேற்று தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாளை தமிழக அரசு சட்டமன்ற அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 7ம் தேதி மதியம் 1.20 மணியளவில் 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.
பிறகு 9ம் தேதி தமிழகத்திற்கு திரும்புகிறார். நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரத்திற்கு மத்தியில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.