நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் : தமிழக அரசு அரசாணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2024, 9:38 pm

நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் : தமிழக அரசு அரசாணை!!!

கடந்தாண்டு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்து இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை தற்போது ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி கடலூர், கோவை, வேலூர், புழல் சிறைகளில் இருந்து 12 சிறைவாசிகளையும் விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடலூர் சிறையில் நீண்ட காலமாக உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சிறையில் இருந்து அபுதாஹீர், விஸ்வநாதன், பூரி கமல், ஹரூன் பாஷா, சாகுல் ஹமீது, பாபு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சிறையில் இருந்து ஸ்ரீனிவாசன், புழல் சிறையில் இருந்து ஜாஹிர் ஆகியோரை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 399

    0

    0