வெளிநாடு போனால் மட்டும் முதலீடுகள் குவிந்து விடாது… CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் ; ஆளுநர் ஆர்என் ரவி அட்டாக்..!!

Author: Babu Lakshmanan
5 June 2023, 9:59 pm

உதகை ; வெளிநாடு செல்வதனால் மட்டும் முதலீடுகளை கொண்டு வர முடியாது என்று ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.

உதகையில் துணைவேந்தர்களின் மாநாடு நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்என் ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது :- நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழில் அதிபர்களுடன் கேட்பதாலோ முதலீடுகள் வந்து விடாது. உலகளாவிய தொழில் முதலீடுகளை ஏற்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்.
முதலீடுகளை ஈர்க்க திறமையான மற்றும் பொருத்தமற்ற மனித ஆற்றலை உருவாக்க வேண்டும்.

முதலில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை அரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீதம் இந்திய மொழிகளை சார்ந்த துறைகளில் மட்டுமே கிடைக்கிறது. எனவே, புதிய கல்விக் கொள்கையை தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும், எனக் கூறினார்.

அண்மையில், முதலீடுகளை கவரவும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தொழிலதிபர்களை அழைப்பு விடுக்கவும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாட்கள் பயணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்று இருந்தார். இந்த நிலையில், அவரது இந்தப் பயணத்தை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக ஆளுநர் ஆர்என் ரவி இந்தக் கருத்தை கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!