உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை… உடனே அறிவிப்பை திரும்பப் பெறுங்க ; தமிழக அரசுக்கு ஆளுநர் போட்ட உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
26 September 2023, 9:41 pm

துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் ஆர்என் ரவி குழு அமைத்து அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தேர்வுக்குழுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. கடந்த 13ந் தேதி இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதலின்றி அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், தமிழக அரசின் அறிவிப்பு பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது என்றும் கூறினார்.

எனவே, அரசிதழில் வெளியிட்ட உத்தரவை திரும்பப்பெற உயர்கல்வித்துறை செயலாளருக்கு ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 578

    0

    0