பாரதத்தை இணைக்கும் பாலமாக இருக்கிறார் ஸ்ரீராமர்… தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

Author: Babu Lakshmanan
26 January 2024, 11:36 am

பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும் வாசம் செய்யும் அவர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருக்கிறார் என்று ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சி முன்னதாக ஆளுநர் ஆர்என் ரவி தமிழக மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது :- நாட்டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு என் இதயம் நெகிழ்ந்த அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன். இராணுவத்தினர், பாதுகாப்பு அமைப்புகள், காவல்துறையினர் ஆகியோருக்கு வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.

அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்து இயற்கை பேரிடர்களின் போது பாதிக்கப்படுவோரை மீட்டு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். நிலவுக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பயணமான சந்திரயான் 3, சூரியனுக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பயணமான ஆதித்யா எல்1 ஆகியவை மூலம் நமது விஞ்ஞானிகள் நாட்டிற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார்கள்.

சர்வதேச விளையாட்டுக்களில் சாதனை படைக்கும் அளவுக்கு பதக்கங்களை வென்ற நமது தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன்.

சில நாட்கள் முன்பாகத்தான் குழந்தை ஸ்ரீ ராமனுக்கு அயோத்தியில் மகோன்னதமான ஸ்ரீராமர் ஆலயத்தில் பிராண பிரதிஷ்டை என்ற யுகாந்தர புனித நிகழ்வு நிறைவேறியது. பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும் வாசம் செய்யும் அவர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருக்கிறார்.
அவர் கருத்தூக்கத்தின் மொத்த உருவம், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் ஆதர்சங்களான நல்லாளுகைக்கான முழுப்பெரும் எடுத்துக்காட்டாக ராம ராஜ்ஜியம் விளங்குகிறது, எனக் கூறினார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?