ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு அவசர பயணம் : முதலில் ‘அவரை’ சந்திக்க பிளான்.. தமிழக அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 9:14 am

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார். அப்போது,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்திருந்தார்.

இந்நிலையில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக ஆளுநரும் ஒப்புக்கொண்டார். இந்த சூழலில்,நீட் விலக்கு மசோதா,கூட்டுறவு திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!