அவங்களால டெங்குவையே ஒழிக்க முடியல.. இதுல சனாதனத்தை ஒழிக்க போறங்களாம் : ஆளுநர் தமிழிசை விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan10 October 2023, 11:26 am
அவங்கனால் டெங்குவையே ஒழிக்க முடியல.. இதுல சனாதனத்தை ஒழிக்க போறங்களாம் : ஆளுநர் தமிழிசை விமர்சனம்!!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே இந்து கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அரசு கட்டுப்பாட்டில் இந்து கோயில்கள் இருக்கக்கூடாது என்பதே அவர்கள் வாதம்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து சர்ச்சையான வகையில் பேசிய நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உதயநிதி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ப்பட்டது.
இதற்கிடையே இது தொடர்பாகத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டையில் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், தமிழ்நாட்டில் ஆன்மீகத்திற்கு எதிராக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்து மதத்தை மட்டுமே இழிவுபடுத்துவதாக விமர்சித்த அவர், மற்ற மதங்களைக் குறித்து எதுவும் பேசுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்து மதம் குறித்தும் ஆன்மீகம், சனாதனம் குறித்தும் தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்க்கை முறை. சனாதனத்தை டெங்குவை ஒழிப்பது போல ஒழிப்போம் என்று கூறுகிறவர்களால். ஆனால் அவர்களால் டெங்குவையே ஒழிக்க முடியவில்லை. இப்போது தமிழ்நாட்டில் முக்கிய அதிகாரிகள் கூட டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.