தமிழ்நாட்டை மதசார்புள்ள மாநிலமாக மாற்ற முயற்சி… கோவில் வருமானத்தை கோவிலுக்கு செலவிட மறுக்கும் திமுக அரசு ; தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
1 பிப்ரவரி 2024, 4:04 மணி
Quick Share

சென்னை ; அமைதியாக உள்ள தமிழ்நாட்டை மதசார்புள்ள மாநிலமாக மாற்ற முயற்சிப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- இந்தியா 6.1 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்து உள்ளதாக உலக பொருளாதார நிர்ணயம் சபை கூறி உள்ளது. அடுத்த ஆண்டு இது 6.2 சதவீதமாக தொடரும். அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் குறையும்.

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், நிலை நிறுத்தப்பட்ட பொருளாதாரம் பாரத தேசத்தில் இருக்கும் என சொல்லி இருக்கிறார்கள். இதற்காக பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும். எவ்வளவு விமர்சனங்கள் வைத்தாலும், பாரத தேசம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று சர்வதேச பொருளாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது.

தமிழ்நாட்டில் எல்லாமே மதம் சார்ந்து கொண்டு போகிறார்கள். அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை வேண்டும் என்றே மத சார்புள்ள தமிழ்நாட்டை மாற்ற முயற்சி செய்கிறார்கள். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை யாராலும் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று. இவர்கள் குற்றம்சாட்டும் இயக்கத்திற்கும், கொலைக்கும் சம்பந்தமில்லை என்று தீர்ப்பு வந்தாகி விட்டது. தீர்ப்பு வந்த பின் அந்த இயக்கத்தை தொடர்பு கொண்டு, அஞ்சலி செலுத்தும் போது மதவெறிக்கு பலியான வார்த்தையை போட்டு போஸ்டர் ஒட்டுகின்றனர். இதை எப்படி ஒத்து கொள்ள முடியும்.

பள்ளிகளில் மத நல்லிணக்க பாடல்கள் பாட வேண்டும் என்று கூறுகின்றனர். இந்து பண்டிகைகளும் வாழ்த்துக்கள் சொல்லாமல் இந்துக்களை துவேசமாக பார்க்கும் முதல்வர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மத நல்லிணக்க பாடலை பாடுவோம் என்று சொல்கின்றனர். யாரிடம் எந்த விதை விதைத்து கொண்டு இருக்கிறீர்கள். வேங்கைவயலில் என்ன நடந்தது. பல இயக்கங்களை உள்ளே விடமாட்டோம் என்று சொல்கிறீர்கள். ஒரு வேங்கைவயலில் நலமாக தண்ணீர் குடித்தவர்கள் மலமாக தண்ணீர் குடிக்க வேண்டிய நிலைமை தமிழ்நாட்டில் வளர்ந்து உள்ளது. என்ன செய்தீர்கள். இதை எல்லாம் பார்க்காமல் ஏதாவது குற்றம் சாட்டுகின்றனர்.

மதத்தை இப்போது அவர்கள் தான் அதிகமாக பேசுகின்றனர். வேறு யாரும் மதத்தை பற்றி பேசுவதில்லை. மத வேற்றுமை ஏற்பட வேண்டும் என செயற்கையாக உருவாக்கி மற்ற இயக்கங்கள் மீது பழி போட தமிழகத்தில் முயற்சி செய்து கொண்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத வேற்றுமையை யாரும் செய்ய கூடாது.

இந்து கோவில் வருமானத்தை எடுத்து கொள்ளும் அரசு. வருமானத்தை வைத்து கோவிலுக்கு வரும் கூட்டத்தை சரி செய்வதோ வசதி செய்வதோ இல்லை. பழனிக்கு பாத யாத்திரை செல்பவர்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள், உணவு ஏற்பாடு என எதுவும் செய்யப்படுவதில்லை. இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு எதுவும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் மற்றவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே ஒடுவது தான் இந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கையாக உள்ளது.

பழனி கோவிலுக்கு இந்து நம்பிக்கை உள்ளவர்களோ அவர்கள் தான் செல்ல வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் வழிபாட செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பு சரி என பார்க்கிறேன், எனக் கூறினார்.

  • Thiruma அந்த நிகழ்ச்சிக்கு விஜய் வந்தால் நான் கலந்து கொள்வது சந்தேகம்தான்.. திருமாவளவன் ஓபன் டாக்!
  • Views: - 237

    0

    0