ஆளுநர் தேநீர் விருந்தில் ஓபிஎஸ் PRESENT…. இபிஎஸ் ABSENT… தொடரும் தமிழக அரசியலில் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
15 August 2022, 9:47 pm

சென்னை : ஆளுநர் நடத்திய தேநீர் விருந்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உள்ள பொதுமக்களும், அரசியல் அமைப்புகளும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, இந்த சுதந்திர தினத்தை அமுத பெரு விழாவாக கொண்டாட முடிவு செய்து, 3 நாட்களுக்கு தேசியக்கொடிகளை வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என மத்திய அரசு அறிவித்தியது.

அதன் அடிப்படையில், பொதுமக்கள் மாணவர்கள் ஏராளமானோர் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் தேசிய கொடிகளை ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, சுதந்திர தின, குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆளுநர் மாளிகையில் அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றனர். திமுக தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விருந்தில் பங்கேற்கவில்லை. மேலும், பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தன் மற்றும் த.மா.க கட்சித் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். மேலும், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் கலந்து கொள்ளும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்வில் ஓபிஎஸ் தரப்பும் கலந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 496

    0

    0