நீட் ரத்து மசோதாவால் வெடித்த சர்ச்சை: ஆளுநரின் 3 நாள் டெல்லி பயணம் திடீர் ரத்து…கடைசி நேரத்தில் ஏன் இந்த மாற்றம்..!!
Author: Rajesh7 February 2022, 8:24 am
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் 3 நாள் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் ரத்து மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 3 நாள் பயணமாக இன்று காலை டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆளுநர் டெல்லி செல்லும் காரணத்தால், சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.