அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு; இனிமேல் வெளிநாடு செல்ல முடியாது; செப்டம்பர் மாதம் அமலுக்கு வரும் புதிய ரூல்ஸ்..!!

Author: Sudha
31 July 2024, 4:21 pm

கம்யூனிச நாடான சீனாவில்,குடிமக்களின் மேல் அரசின் கட்டுப்பாடுகள் அதிகம்.டிவி, சமூக வலைதளம் என எல்லாவற்றிலும் அரசின் கண்காணிப்பு முழுமையாக இருக்கும்.

அரசு ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில், இப்போது அரசு ஊழியர்களுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு, ரகசியங்களை பாதுகாக்க பயிற்சி அளிக்கப் படுகிறது.

அரசு ரகசியங்களை கையாளும் ஊழியர்கள், முன் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

ஊழியர்கள் தங்களது பணியில் இருந்து விலகிய பிறகும், ரகசிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில கட்டுப்பாடுகள் ஆயுள் முழுவதும் நீடிக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரகசியங்களை பாதுகாக்க, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் முக்கிய ஆவணங்களை பார்க்க வேண்டும். ஆவணங்களை நகலெடுக்கவோ, பதிவிறக்கவோ முடியாது.

ரகசியங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது

சீன அரசு பிறப்பித்துள்ளது இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் மாதத்துக்குள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?