அம்மா உணவகத்தில் அரசு பள்ளியா? மனவேதனையடைந்த இபிஎஸ்.. திமுக அரசுக்கு கோரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 2:12 pm

அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த விடியா திமுக அரசு தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது.

இதையும் படியுங்க: ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு முன்னாள் அமைச்சர் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. 2 சென்ட் நிலம் வழங்கிய எஸ்பி வேலுமணி!!

எங்கள் ஆட்சியில் வழங்கியதைப் போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில்,
இன்று சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று சொல்லி வரும் நிலையில், வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் விடியா திமுக முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 215

    0

    0