நம்ம நிலைமை வடிவேலு காமெடி போல ஆகிடுச்சு… போராட்டத்தில் CM ஸ்டாலினை விமர்சித்த அரசு பெண் ஊழியர்.. வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2023, 3:06 pm
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருப்பவர் ஸ்டாலின். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் நான் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்பது போல பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதையடுத்து, கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
இந்த அரசு அமைந்து 2 வருடங்களை வெகு விரைவில் நிறைவு செய்ய உள்ளது. எனினும், தாம் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பட்டம் நடத்தியுள்ளனர். அக்கூட்டத்தில், பெண்மணி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தை ரவுண்டடித்து வருகிறது.
அந்த வீடியோவில், ஸ்டாலின் அவர்களே, கெத்தா இருக்கிறது அல்லவா. மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களே என்று இருந்திருக்க வேண்டியது. அதனை, முதல்வராக மாற்றியது நாம் தான்.
இன்றைக்கு, அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால் உங்களுக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை 40 அறிக்கை வெளியிட்டு இருப்பார். டி.பி.எஸ்-க்கு அறிக்கை வந்திருக்கும், டி.ஏ.விற்கு அறிக்கை வந்து இருக்கும்.
இந்நேரத்தில், நம்ம நிதியமைச்சரை மறந்து விட்டோம். அவர், உலக வங்கியை உச்சாணி கொம்பில் வைத்தவர். இன்றைக்கு, அவர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தால் அவர் உங்களை பார்த்து என்ன சொல்லி இருப்பார் தெரியுமா? நீங்கள் ஜி எஃப் அல்ல இரண்டு ஜி எஃப்-க்கு நீங்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லி இருப்பார்.
அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலினை கழுவி ஊத்தி ???அனைவரது *கவனத்தை ஈர்த்த அரசூழியர்* pic.twitter.com/vooJ6RV4v8
— T. Ravikumar (@TRaviku49546497) January 6, 2023
இன்று நாம் செய்த தவறை அனுபவித்து வருகிறோம். ஒருவேளை அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால் இன்று அவர் நம்மை சந்தித்து இருப்பார்.
அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலினை கழுவி ஊத்தி ???அனைவரது *கவனத்தை ஈர்த்த அரசூழியர்* pic.twitter.com/vooJ6RV4v8
— T. Ravikumar (@TRaviku49546497) January 6, 2023
இன்று நம் வாழ்க்கை வடிவேலு காமெடி போல ஆகி விட்டது என்று கூறியுள்ளார்.