தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள்: செங்காடு கிராமத்தில் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Rajesh
24 April 2022, 9:36 am

சென்னை: பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. தேசிய பஞ்சாயத்துராஜ் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி இன்று கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த உள்ளாட்சித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த கிராம சபைக் கூட்டங்களில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

முன்னதாக, இரு தினங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெலியிட்ட அறிவிப்பில், குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்கள் மட்டுமின்றி தண்ணீர் தினம் மற்றும் உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களிலும் இனி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…