அம்மாவாக மாறிய தாத்தா: மழையில் பொத்திப் பொத்தி அழைத்துச் சென்ற தாயுள்ளம்…!!

Author: Sudha
5 August 2024, 11:57 am

குடும்பத்தில் பல உறவுகள் இருந்தாலும் தாத்தா பாட்டி உறவு என்பது குடும்பத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம். தாத்தா போட்டிகள் பேரக்குழந்தைகள் மீது அதிக அக்கறையோடும் அரவணைப்போடும் இருப்பார்கள்.

தென்காசி மாவட்டத்தில் தனது இரண்டரை வயது பேரனை அவனது தாத்தா சைக்கிளில் பின் அமர வைத்து அரவணைப்போடு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் புல்லுக்கட்டு வலசை பகுதியில் சாரல் மழை பெய்து வந்ததால் பேரன் மழையில் நனையாமல் இருக்க டவலால் உடலை மூடியுள்ளார். மேலும் பேரன் கீழே விழாமல் இருக்க கயிறால் அவனை சைக்கிளில் கட்டியுள்ளார். ஆனால் அவர் நனைந்தபடியே செல்கிறார்.

தாத்தாவின் இந்த பாசத்தை பார்த்து வியந்த வழிப்போக்கர் ஒருவர் தாத்தாவை வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுத்த நபர் எழுப்பிய கேள்விக்கு முதியவர் அளித்த பதிலில், எனது மகனுக்கு இரண்டாவதாக மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் மருமகள் பிரசவத்துக்காக அவளது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். அவள் வீட்டிலும் குழந்தையை கவனிக்க ஆள் இல்லாததால் பேரனை என்னிடம் ஒப்படைத்தார். நான் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி செய்து வருகிறேன் காலையிலையே பேரனை என்னோடு அழைத்து சென்று விட்டேன். தற்பொது வேலை முடிந்து வீட்டிக்கு செல்கிறோம் என புன்னகையோடு தெரிவிக்கிறார்.

என்ன தான் ஆடி ஓடி சம்பாதித்தாலும் இதுபோன்ற உறவுகளும் அவர்களின் பாசமும் கிடைப்பது என்பது வரமாக இருக்கக் கூடிய நிலையில் இக்காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

  • என் கணவருடைய எனர்ஜி 10 ஆளுக்கு சமம்…வெளிப்படையாக பேசிய நரேஷ் பாபுவின் 4வது மனைவி..!