டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் கடந்த 2018ம் ஆண்டு 12 ஆயிரம் காலிப்பணியிடங்களும், 2019ம் ஆண்டு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.
இதனையடுத்து கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகள் தேர்வுகள் நடத்தப்படவில்லை. குரூப் 4 தேர்வுகளுக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த 2022ஆம்ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. 8 மாதங்கள் ஆன பிறகு மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. இதுவரை கலந்தாய்வு நடைபெறாத நிலை உள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக, நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது.
ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை. இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
TNPSC தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள் , ஆகவே விரைந்து தொகுதி -4க்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
திருவள்ளூர் மாவட்டம் வேலூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முத்துராஜ். 60 வயதான இவருக்கு சுசீலா என்ற மனைவியும், நான்கு மகன்கள்…
This website uses cookies.