புதிய உச்சத்தை தொட்ட ஜிஎஸ்டி வசூல்… மலைக்க வைத்த ஏப்ரல் மாத Collection : பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2024, 4:25 pm

புதிய உச்சத்தை தொட்ட ஜிஎஸ்டி வசூல்… மலைக்க வைத்த ஏப்ரல் மாத Collection : பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!

புதிய உச்சத்தை தொட்ட ஜிஎஸ்டி வசூல்… மலைக்க வைத்த ஏப்ரல் மாத Collection!

இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2,10,267 கோடி ஜிஎஸ்டியில்,
சிஜிஎஸ்டி – ரூ.43,846 கோடி,
எஸ்ஜிஎஸ்டி – ரூ.53,538 கோடி,
ஐஜிஎஸ்டி – ரூ.99,623 கோடி, (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.37,826 கோடி அடங்கும்)
செஸ் – ரூ.13,260 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,008 கோடி அடங்கும்) ஆகியவை வசூலாகி உள்ளது.

ஜிஎஸ்டி வருவாயில் இதுவரையில் இல்லாத வகையில் அதிகபட்ச மாதாந்திர வசூலாக ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.அதேநேரத்தில் கடந்தாண்டு (2023) ஏப்ரல் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி தொகையை விட இந்தாண்டு கிடைத்த வருமானம் 12.40 சதவீதம் அதிகம் ஆகும்.

மேலும் படிக்க: மீண்டும் BJP ஆட்சி வந்தால் எங்க கோமணம் பறிபோகும்.. நாமம் போட மோடிக்கு எதிராக 111 பேர்.. அய்யாகண்ணு அறிவிப்பு!

கடந்தாண்டு ஏப்ரலில் ரூ.1,87,035 கோடி வசூலான நிலையில், இந்த ஏப்ரல் மாதம் ரூ.2,10,267 கோடி வசூலாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.12,210 கோடி வசூலாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 785

    0

    0