நாளையுடன் ஓய்வு… இன்றைக்கு சஸ்பெண்ட்.. நிர்மலா சீதாராமனை எதிர்த்த அதிகாரி மீது மத்திய அரசு நடவடிக்கை

Author: Babu Lakshmanan
30 January 2024, 2:46 pm

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஆர்எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அண்மையில் சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்பவத்திற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனிடையே, விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஆர்எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே, பாலமுருகன் நாளையுடன் ஓய்வு பெற இருந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி