குஜராத், இமாச்சலில் மீண்டும் பறக்கும் பாஜக கொடி… வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : தொண்டர்கள் உற்சாகம்!!

Author: Babu Lakshmanan
5 December 2022, 7:25 pm

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இந்தத் தேர்தலில் 883 வேட்பாளர்கள் உள்ளனர். அகமதாபாத், வதோதரா போன்ற குஜராத்தின் வட மற்றும் மத்திய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்காக 26,409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 36,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

UP Election - updatenews360

பிரதமர் மோடி இன்று தனது ஆகமதாபாத்தில் உள்ள சபர்மதி தொகுதி பள்ளியில் நேரில் சென்று வாக்களித்தார். அதே போல், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகமபாத் நரன்புராவில் உள்ள அங்கூர் தொகுதி, காமேஷ்வர் கோவில் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 10.30 மணியளவில் வாக்களித்தார். குஜராத் முதலமைச்சர் புபேந்திர படேல் அகமதாபாதி உள்ள ஷிலாஜ் தொடக்க பள்ளியில் வாக்களித்தார்.

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைய இருப்பது உறுதியாகியுள்ளது.

அதேபோல, 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெறும் என்று ஒருசில தனியார் சேனல்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேவேளையில், பாஜகவுக்கு காங்கிரஸ் சவால் விடுக்கும் விதமாக, சரிசமமான இடங்களைக் கைப்பற்றும் என்பதால், அங்கு இழுபறி ஏறபட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!