குடியுரிமையைத் துறக்கும் குஜராத் மக்கள்; 2 மடங்காக அதிகரிப்பு; காரணம் என்ன?,…

Author: Sudha
13 ஜூலை 2024, 9:14 காலை
Quick Share

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கிறது. அதாவது ஒருவர் ஒரே நேரத்தில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்று இருக்கலாம்.

இந்தியச் சட்டம் இரட்டை குடியுரிமையை அனுமதிப்பதில்லை.பாஸ்போர்ட் சட்டம் 1967இன் படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுவிட்டால், மூன்று ஆண்டுகளுக்குள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைத்தால் 10,000 முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2022ல் குஜராத்தைச் சேர்ந்த 241 பேர் இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்து இருந்தனர். 2023 இல் அந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து 485 ஆக அதிகரித்துள்ளது.

பாஸ்போர்ட்டை ஒப்படைத்தவர்களிள் பெரும்பாலானோர் 30-45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடியேறியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

2014-2022 வரையிலான காலகட்டத்தில் இந்திய குடியுரிமையை துறந்தவர்களின் எண்ணிக்கையில் குஜராத் மாநிலம் 3ம் இடத்தில் உள்ளது.

டெல்லி முதலிடத்திலும்,பஞ்சாப் 2ம் இடத்திலும் உள்ளன.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகே குடியுரிமையைத் துறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள், அங்கேயே செட்டிலாகிவிடுவதாலேயே இது அதிகரிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “குஜராத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான இளைஞர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் அப்படியே அங்கு செட்டிலாகிவிடுகிறார்கள்,வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த வேண்டும் என மக்கள் நினைப்பதும், பாஸ்போர்ட்களை சரண்டர் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாகும்” என்று தெரிவித்தார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 161

    0

    0