ஒரு வருஷத்துக்கு 1 லட்சம் கோடி.. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கொலை வழக்குப்பதிவு செய்க ; எச் ராஜா வலியுறுத்தல்!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 8:55 am

ராணிப்பேட்டை ; டாஸ்மாக் மதுகுடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்பு அழப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி குடித்த இருவர் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது எப்படி கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார்.

அரசு டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

அரசு டாஸ்மாக் மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு முழுப்பொறுப்பையும் ஏற்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…