‘டான்செட்’ தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு: 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்…!!
Author: Rajesh1 May 2022, 8:40 am
சென்னை: டான்செட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது.
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான டான்செட் தேர்வுக்கு மொத்தம் 36 ஆயிரத்து 710 பேர் விண்ணப்பித்து இருப்பதாக டான்செட் தேர்வு செயலாளர் தெரிவித்துள்ளார். இதில் எம்.பி.ஏ. படிப்புக்கு 21 ஆயிரத்து 557 பேரும், எம்.சி.ஏ. படிப்புக்கு 8 ஆயிரத்து 391 பேரும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு 6 ஆயிரத்து 762 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான தேர்வு வருகிற 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்திலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் சென்று தெரிந்து கொள்ளலாம்.