குப்பைத் தொட்டியில் கிடந்த கை.. கிணற்றில் கிடந்த சடலம் : பரபரப்பை கிளப்பிய கோவை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 12:03 pm

கோவை துடியலூரில் அழகு நிலைய ஊழியர் பிரபுவின் துண்டிக்கப்பட்ட கை கிடைத்த வழக்கு – உடல் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் மேலும் உடலில் உறுப்புகள் கண்டறியப்பட்டதுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன் துடியலூர் வெள்ளகிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ஆணின் இடது கை கண்டறியப்பட்டது. மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அழகு நிலைய ஊழியர் பிரபு என்பவரது கை தான் என உறுதியானது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் உடல் எங்கே உள்ளது என்பது குறித்த தகவல் வெளியானது. இதையடுத்து விசாரணை தீவிரபடுத்தப்பட்ட நிலையில் இறந்த பிரபுவின் உடல் பாகங்கள் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 525

    0

    0