கோயில் வைப்பு நிதியில் பல கோடி ரூபாய் கையாடல்? செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பரபரப்பு பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2023, 11:58 am

திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு புஷ்பதீஸ்வரர் திருக்கோவிலில்
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் ஆகியோருடன் திருக்கோவில் வளாகம் திருக்குளம் ஆகியவற்றை ஆய்வு செய்து திருக்குளத்தை சுற்றி மரங்கள் நட அறிவுறுத்தினார்.

பின்னர் சாமி தரிசனம் மேற்கொண்ட அவர் ஆய்வின் போது அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் 2006 ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கும் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த மதிப்பீடு திட்டம் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவில் சொத்துக்கள் உள்ள இடங்களில் முறையாக அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இரண்டு முறை ஆய்வு செய்து பணிகளை நடத்த கூறினாலும் எந்த பணிகளும் நடைபெறவில்லை.

பெரியபாளையம் பூமி பூஜைகளை போட்டதோடு பணிகள் அப்படியே உள்ளது என்றும் இணை ஆணையர் லட்சுமணன் மீது நல்ல அபிப்பிராயம் இருந்தது என்றும் நன்கொடையாளர்கள் குடமுழுக்கு செய்ய அரிய துறை ஞாயிறு ஆண்டார்குப்பம் போன்ற கோவில்களுக்கு அனுமதி கேட்டும் தற்போது வரை ஏன் அனுமதி வழங்கவில்லை என அவரிடம் கேள்வி எழுப்பினர்.

பின்னர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சிவலிங்கம் உள்ள இடத்தில் கோவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஞாயிறு புஷ்பராஜேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அரிய துறை ஆண்டார் குப்பம் கோவில்களில்நடத்துவதற்கும்கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

பின்னர் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், புஷ்பரதேஸ்வரர் 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதற்கு குடமுழக்கு நடத்தப்படும் என்றும்மக்கள் கருத்து கேட்டு அருமந்தை பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் சீரமைப்பு பணியும், கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு கோவில் எழுப்பும் பணியும் முதல்வர் ஆலோசனை படி கட்டப்படும் என்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சொந்தமான நிலங்கள் குறித்தும் 50 ஆண்டுகள் திருப்பணி நடைபெறாத அக் கோவிலுக்கு திருப்பணி நடத்தநடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் முறையில் 26 பேர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்னர். பழனியில் 11 கலச பூஜையுடன் நீதிமன்ற அறிவுறுத்தல் வேண்டுகோளை ஏற்று பழனி தண்டாயுதபாணி கோவில் சிறப்பான கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டல அபிஷேகமும் இரண்டு நாட்களுக்குள் நடைபெற உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கோவில் சிலைககளை பாதுக்காக்க 1850 பாதுகாப்பு அறைகள் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டு தற்போது 700க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அறைகள் சிலைகளை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும்12ஆயிரம் கோவில்களுக்கு மேல் வைப்பு நிதியை உயர்த்தி தந்து கோவில்களில் தீபம் ஏற்ற வைத்தவர் முதல்வர் என்றும் நாளை துறை ரீதியாக இந்து சமயத் அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையிலா ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

வருமானம் இல்லாத கோவில்களுக்கு ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதியை இரண்டு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கியதாகவும் கூறிய அவர் பழவேற்காடு மெதூர் சிவன் கோவில்களில் நடைபெறும் பணிகள்
விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுவாபுரி கோவிலில் பெருகி வரும் பக்தர்களின் கூட்டத்தை நெறிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்

  • Amaran Day 16 box office Collection Strong Performance அமரன் பாக்ஸ் ஆபிஸ் நாள் 16: கங்குவா வெளியீட்டிலும் பாதிக்கப்படாத சிவகார்த்திகேயன்!!
  • Views: - 411

    0

    0