‘அண்ணா’ பிறந்தநாள் வாழ்த்துக்கள்… சீமானுக்கு ‘தம்பி’ விஜய் போனில் வாழ்த்து : கூட்டணிக்கு வலை?

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2023, 2:23 pm

‘அண்ணா’ பிறந்தநாள் வாழ்த்துக்கள்… சீமானுக்கு ‘தம்பி’ விஜய் போனில் வாழ்த்து : கூட்டணிக்கு வலை?

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றனர். அண்மையில் அவரது விஜய் மக்கய் இயக்கத்தின் நடவடிக்கைகளும் அப்படித்தான் உள்ளன.

இதனால் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் லியோ பட வெற்றி விழாவில், விஜய் பேசியதும் அரசியல் நுழைவது போலவே அமைந்திருந்தது.

அதுவும் 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என்ற வாசகமும் அப்படித்தான் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இரவு நேர பாடசாலை, பெரியார், அம்பேத்கர், அண்ணா போன்ற தலைவர்களின் பிறந்தநாளன்று அவரது சிலைகளுக்கு மாலை மரியாதை என எல்லாமே அரசியலுக்கு அஸ்திவாரம் போடுவது போல அமைந்தது.

இது குறித்து அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது பற்றி கேட்கும்போதெல்லாம், அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது, அவர் அரசியலுக்கு வந்தால் என்னிடம் வந்து கூட்டணிக்கு கேட்டால் நான் தயார் என்று அடிக்கடி கூறியுள்ளார்.

சமீபத்தில் லியோ பட விவகாரங்களில் நடிகர் விஜய்யை முழுமையாக சீமான் ஆதரித்து பேசுகிறார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், தம்பி விஜய் அடுத்த ஆண்டு முதல் படங்களில் நடிப்பதை நிறுத்தப் போகிறார். தம்பி விஜய் அரசியல் கட்சி தொடங்குவார். தம்பி விஜய் அரசியல் கட்சி தொடங்கட்டும். அப்போது கூட்டணி குறித்து பேசலாம். இப்போது நான் தனித்தே போட்டியிடுகிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் சீமானின் 57-வது பிறந்த நாள் இன்று உற்சாகமாகவும் வெகு விமரிசையாகவும் நாம் தமிழர் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது.

இன்றைய பிறந்த நாளின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல நடிகர் விஜய்யும் சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி பாக்கியராசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே சீமான், விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடும் என்கிற ஆரூடங்கள் இருக்க.. விஜய் தற்போது சீமானுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததை கூட சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாற்றி வருகின்றனர் நாம் தமிழர் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 280

    0

    0