ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் பாஜக.. தவிடு பொடியாகும் கருத்துக்கணிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 10:45 am

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் பரபரப்பு மாற்றம் நிகழ்ந்துள்ளது

ஹரியானாவில் கடந்த 2 முறை பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 90 தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் ஒரே கட்டமாக கடந்த 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலை முதலே காங்கிரஸ் முன்னிலை பெற்ற நிலையில் அப்படியே நிலை மாறி வருகிறது.

தற்போது பாஜக 47 இடங்களி முன்னிலை பெற்று வரும் நிலையில் காட்ஙகிரஸ் 36 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

அதே போல 10 வருடங்களுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்துள்ளது. 90 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடந்தது.

இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் இண்டியா கூட்டணி 51 இடங்களிலும் பாஜக கூட்டணி 24 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என கூறிய நிலையில், பாஜக ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 120

    0

    0