நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் வீடியோ… CM ஸ்டாலின் அவர்களே உடனே நடவடிக்கை எடுங்க : கமல்ஹாசன் பரபரப்பு ட்விட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2023, 11:51 am

சென்னை சாலிகிராமம் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு வெஸ்ட் மின்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

17 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் 640 வீடுகள் உள்ள நிலையில் 450 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கட்டடத்தின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு வருவதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு இருந்தது.

இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வீடென்று எதனை சொல்வீர்? என குறிப்பிட்டு, நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் இந்த வீடியோவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். உறுதியற்ற இந்த அடுக்குமாடி கட்டிடம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.

தரமான வீட்டை வழங்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் வழிவகை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் தாது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?