மீண்டும் கனமழை… அந்த 2 மாவட்டங்களுக்கு ஆபத்து : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விபரம்!
Author: Udayachandran RadhaKrishnan8 January 2024, 8:41 am
மீண்டும் கனமழை… அந்த 2 மாவட்டங்களுக்கு ஆபத்து : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விபரம்!
2023ஆம் வருடம் கனமழை பெய்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தது. அங்குள்ள மக்கள் இயல்வு வாழ்க்கையை தொலைத்தனர்.
வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் அவதியடைந்தனர். இதையடுத்து மத்திய மாநில அரசுகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியை துவங்கினர். அதே போல பலர் முகாம்களில் தங்க வைத்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணமும் அறிவித்தது.
அதைத்தொடர்ந்து தென் மாவட்டமான தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை தமிழக அரசை அடுத்தடுத்து நிலைகுலைய செய்தது. மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்த சுவடுகள் இன்னும் மறையாத நிலையில், நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தாலும், மற்ற மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் கனமழை காரணமாக கடலூர்,விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.