தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரள பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக 26ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், டெல்டா மாவட்டங்களில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை (காரமடை ஒன்றியம் மட்டும்) ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேவேளையில், சென்னையில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாகர்ஜூனா. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என நடித்து வரும் நாகர்ஜூனா…
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
This website uses cookies.