தீவிரமாக பெய்யும் கனமழை… தமிழகத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2022, 9:57 pm

சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 110 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கககடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 13 லிருந்து 14 கி.மீ அதிகரித்துள்ளது. இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர்,வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை,திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கொடைக்கானல், சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!