டெல்டா மாவட்டங்களில் கொட்டும் கனமழை.. அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு : வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2024, 9:41 am

டெல்டா மாவட்டங்களில் கொட்டும் கனமழை.. அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு : வெளியான அறிவிப்பு!!

நேற்று காலை முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழி, சிதம்பரம் ஊர்களில் 22 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை நீடிப்பதால் சிதம்பரம் நகரத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளதால் இன்றைய தினம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!