ஹெராயின் கடத்தல்… AK 47 துப்பாக்கியா? என்ஐஏ போட்ட சம்மன்… கொதித்தெழுந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்!!!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2023, 8:52 pm
ஹெராயின் கடத்தல்… AK 47 துப்பாக்கியா? என்ஐஏ போட்ட சம்மன்… கொதித்தெழுந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்!!!
நடிகை வரலட்சுமி சரத்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஐ.ஏ இன்று சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.
கேரளா விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக கைதான ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் உதவியாளர் என்பதால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்னிடம் வேலை பார்த்த ஆதிலிங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வேலையிலிருந்து நின்றுவிட்டார்.
ஆதிலிங்கம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் எனது தாயார் இடத்தில் மட்டுமே விசாரணை செய்தனர். விசாரணைக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. நேரில் ஆஜராக எனக்கு எந்தவித அழைப்பாணையும் எனக்கு தரப்படவில்லை. என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியதாக வெளியாக தகவல் தவறானது” என்று விளக்கம் அளித்துள்ளார்.