பழனி கோவிலில் நுழைய இந்து அல்லாதவர்களுக்கு தடை… அறிவிப்பு பலகைகளை வைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Author: Babu Lakshmanan
30 January 2024, 11:49 am

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கொடி மரம் தாண்டி உள்ளே செல்ல தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த சட்டமானது இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட அனைத்து கோவில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறி அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்த பலகை அப்புறப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பழனி கோவிலில் இந்து அல்லாதவர்களை கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

அதாவது, பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கொடி மரம் தாண்டி உள்ளே செல்ல தடை விதிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும், மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால், கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாற்று மதத்தை சார்ந்தவர்களிடம் கடவுள் மீது நம்பிக்கை உண்டு என்ற உறுதிமொழி எழுதி வாங்கிய பின் அனுமதிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • AR Rahman wife health issues சாய்ரா பானு வெளியிட்ட ஆடியோ..! பிரிவிற்கு காரணம் இது தானா..?
  • Views: - 360

    0

    0