ஹிஜாப் விவகாரம்… இஸ்லாமிய மாணவிகள் வைத்து கோரிக்கை மீது இன்று விசாரணை : பரபரப்பில் கர்நாடகா!!

Author: Babu Lakshmanan
15 February 2022, 10:54 am

ஹிஜாப் அணியும் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் எழுப்பிய கோரிக்கைக்கு, கர்நாடகா உயர்நீதிமன்றம் என்ன பதில் அளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தற்போது மிகப்பெரும் அளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களை ஹிஜாப் அணிந்து வர அனுமதித்தால், நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று இந்து மாணவிகள் அணிந்து சென்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

இதைத் தொடர்ந்து, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பிரச்சனை எழுந்து வந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனிடையே, ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பாக கர்நாடகா நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜூம் மீட்டிங் வழியாகநடந்த வழக்கின் விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற யூடியூப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் மாணவிகள் எப்போதில் இருந்து ஹிஜாப் அணிகின்றனர் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பினர், கடந்த 2 ஆண்டுகளாக மாணவிகள் ஹிஜாப் அணிவதாகவும், மாணவிகள் சீருடை அணிய மறுக்கவில்லை என்றும், சீருடை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று மட்டுமே கோருவதாக கூறப்பட்டது.

மேலும், ஹிஜாப் அணிவது மத உரிமை என்றும், கல்வி நிலையங்களின் ஹிஜாப் அணிவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, வழக்கு விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகையில், சீருடை நிறத்தில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்ற மாணவிகளின் கோரிக்கை ஏற்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1712

    0

    0