இந்தி VS தமிழ்.. இது தான் அண்ணாவின் வெற்றியா? பத்ரி சேஷாத்ரி போட்ட பதிவு : கொந்தளித்த திமுக எம்பி செந்தில்குமார்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2022, 4:20 pm

கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகம் மூலமாக பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு வருபவர் பத்ரி சேஷாத்ரி. வலதுசாரி கருத்தியல் மீது நம்பிக்கை கொண்டு இயங்கி வந்த இவர், தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழு இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் திமுக தரப்பில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் இந்தி vs தமிழ் என்ற விவாதம் எழுந்தது. இதனால் திமுக ஆதரவாளர்கள் பலரும் தமிழ் மொழியின் சிறப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதற்கு பதிலடியாக இந்தியில் ஐம்பெருங் (ஆனால் இரண்டுதான் தரம், இரண்டு காணோம், ஒன்று சுமார்) காப்பியங்கள் மாதிரி கிடையாது. பிற்கால மொழி. ஆனால் அந்த வழியில் போனால், சமஸ்கிருதத்தில் இருக்கும் இலக்கியங்களில் ஒரு துளிகூடத் தமிழில் கிடையாதே? அந்த அடிப்படையில் இந்தியாவில் வேறு எந்த மொழியும் நிற்காதே? இலக்கியம் இலக்கணம், காப்பியம், நாடகங்கள், கணிதம், வானியல், ரசாயனம் முதற்கொண்டு சமஸ்கிருதத்தில் இருப்பதுடன் தமிழை ஒப்பிடவே முடியாதே?

அப்படிப் பார்த்தால் ஆங்கிலத்தில் இன்று இருக்கும் எதனுடனும் எந்த இந்திய மொழியையும் (தமிழ் உட்பட) ஒப்பிட முடியாதே?” என்று பதிவிட்டிருந்ததாக ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதுமட்டுமல்லாமல், அண்ணாவையும் இழிவாக விமர்சித்து கருத்து பதிவிட்டார்.

இதற்கு திமுக ஆதரவாளர்கள் தரப்பில் சமுக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணா குறித்து இழிவான கருத்துக்களை பதிவிட்ட பத்ரி சேஷாத்ரி தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப்பட்டதாக திமுக எம்பி செந்தில் குமார் தெரிவித்தார். பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டதற்கான நகலையும் பகிர்ந்திருந்தார்.

இதற்கு பத்ரி சேஷாதிரி திமுக எம்பி செந்தில் குமாரியின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து, இதுதான் அண்ணாவின் வெற்றியா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக எம்பி செந்தில் குமார், ஆம், இது எங்கள் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களின் வெற்றி என்று பதிலடி கொடுத்துள்ளார். திமுக எம்பி செந்தில் குமாரியின் ட்வீட், திமுக ஆதரவாளர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…
  • Close menu