மதமாற்றம் செய்பவர்களுக்கு துணைபோகும் திமுக அரசு : அர்ஜுன் சம்பத் கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
8 April 2022, 6:16 pm

திமுகவே தற்போது மினி அதிமுக போல தான் செயல்படுவதாக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி – தெய்வீக பேரவை இணைப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது :- வருகின்ற தமிழ் புத்தாண்டு /சித்திரை 1 ஆம் தேதி அனைத்து ஆலயங்களிலும் புத்தாண்டு பூஜைகள் முறைப்படி நடத்தப்பட வேண்டும். அறநிலையத் துறை சொந்தமான கோவில்களில் சிறப்பு பூஜைகளுடன் புத்தாண்டு கொண்டாடப் பட வேண்டும். இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை தொடர்பான வேத மற்றும் ஆகம வகுப்புகள் அனைத்து கோவில்களிலும் நடத்தப்பட வேண்டும்.

இந்து அறநிலையத் துறை சார்ந்த அனைத்து கோவில்களிலும் பக்தி சொற்பொழிவு நடத்த வேண்டும். அதற்காக சொற்பொழிவாளர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுள்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியும், திரைப்படம் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . பெண்கள் குறித்து இழிவாக குறிப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது குற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அரசு பணியிடங்களில் நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் திமுக அரசு தான் என்றும், ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என அமைச்சர் நேரு கூறியிருக்கிறார்.

மத்திய அரசு எங்கே சொத்து வரியை உயர்த்தியது..? மதமாற்றம் செய்பவர்களுக்கு தான் திமுக அரசு ஆதரவாக இருந்து வருகிறது. அதனை விடுத்து முதல்வர் ஸ்டாலின் என்ஜிஓ., பிடியில் இருந்து வெளிவர வேண்டும். அண்ணா, கலைஞர் வழியில் முறையாக திமுக ஆட்சி செய்ய வேண்டும். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும்.

திமுகவே தற்போது மினி அதிமுக போல தான் செயல்படுகிறது. இந்த அரசு மூலம் பயங்கரவாத சக்திகள் ஊடுருவுகின்றனர். இந்து விரோத செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்று கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1354

    0

    0