முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நலம் பாதிப்பு… உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க திட்டமா…? சந்தேகத்தை கிளப்பும் இந்து முன்னணி..!!

Author: Babu Lakshmanan
13 July 2022, 4:15 pm
Quick Share

ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு என்ன சொல்லனுமோ அதற்கு உட்பட்டே கவர்னர் செயல்படுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கரூர் வருகை தந்தார். அவருக்கு கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜவஹர் பஜாரில் உள்ள சுமதி பலகாரக்கடை என்கின்ற தனியார் உணவக கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- இந்துக்கள் கல்லூரிகள் துவங்க ஆயிரம் சிக்கல்கள் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் பள்ளி, கல்லூரிகள் துவங்க உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக சர்ச்சுகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், 150க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் இந்த திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத இடத்தில் சர்ச்கள் செயல்படுகின்றன. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

சர்ச் வருமானம் சர்ச் வளர்ச்சிக்கும், மசூதி வருமானம் மசூதி வளர்ச்சிக்கும் பயன்படுத்தும் நிலையில், இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. அரசாங்கம் ஆலையத்தை விட்டு வெளியேற வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பிரச்சார பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை தமிழக அரசு என அழைக்கின்றனர். அதனால் கவர்னரின் ஆலோசகர் என்று முதல்வரை சொல்கிறோம். ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு என்ன சொல்லனுமோ அதற்கு உட்பட்டே கவர்னர் பேசுகிறார், செயல்படுகிறார்.

கோவில் நிலங்கள், கோவிலின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டது. கோவில் இடங்கள் 5 லட்சம் ஏக்கர் ஆனால், அதை விட குறைவாக தற்போது உள்ளது. பலரும் கோவில் இடத்திற்கு பத்திரப் பதிவு செய்து கொள்கிறார்கள். இவற்றை தமிழக அரசு மீட்க வேண்டும். இந்துக்கு விரோதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக சர்சுகள் செயல்பட்டு வருகிறது.

கவர்னர் ஆலோசகருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் யாருக்கு பொறுப்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. துணை முதல்வரை நியமனம் செய்கிறார்களா அல்லது மகாராஸ்டிரா போல் நடக்குமா என்பது தெரியவில்லை. அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்கள் ஆசை. தமிழகத்தில் பிரதான எதிர்கட்சி ஒன்று கட்டாயம் வேண்டும், என்றும் அவர் கூறினார்.

  • snehan recent news சம்பவம் செய்த சினேகன்…திகைத்து போன கன்னிகா..!என்னவா இருக்கும் ?
  • Views: - 819

    0

    0