செந்தில் பாலாஜி கையில் 40 எம்எல்ஏக்கள்… விரைவில் மகாராஷ்டிரா கதிதான் தமிழகத்திற்கும்… இந்து அமைப்பு தலைவர் கணிப்பு

Author: Babu Lakshmanan
4 July 2022, 4:04 pm

மதுரை : மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட நிலைதான் தமிழகத்திற்கும் நடக்கும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர இந்து முன்னனி சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்கா திடலில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், மாநில நிர்வாகிகள் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூரிலிருந்து சென்னை வரை நடைபெறும் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணத்தினை வரவேற்ற மதுரை மாநகர், புறநகர் மாவட்ட இந்து முன்னனியினர் இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியனுக்கு ஆள் உயர மலர் மாலை, செங்கோல், வீர வாள் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார்கள்.

பொதுக்கூட்டத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது :- தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை நிறுத்துகிறாரோ, அப்போது தான் ஸ்டாலினை தமிழக முதல்வர் என நாங்கள் அழைப்போம். அதுவரை கவர்னரின் ஆலோசகர் என நாங்கள் அழைப்போம்.

தமிழகத்தில் விரைவில் ஸ்டாலின் ஆட்சி முடிவடையும். ஏன் என்றால் செந்தில் பாலாஜி 40 எம்.எல்.ஏ.களின் ஆதரவை வைத்து உள்ளார் என தகவல்கள் கூறுகிறது. தமிழக அரசியல் விரைவில் தற்போதய மகாராஷ்டிரா அரசியல் போல் மாற உள்ளது.

மன்னார்குடி ஜீயர் கோவில்களின் முன்னால் உள்ள ஈ.வெ.ரா பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் நானே அகற்றுவேன் என கூறிய அவரது தைரியத்தை இந்து முண்ணனி வரவேற்கிறது. அவருக்கு இந்து முன்னனி துணை நிற்கும். இஸ்லாமிய பெண்கள் பர்தா போடுவதை அவர்களே விரும்பவில்லை. ஆகவே அவர்களுக்கு பர்தாவிலிருந்து சுதந்திரம் தர வேண்டும். என்றார்

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி