குட்டியைத் தொட்ட பராமரிப்பாளர்; தாக்குதல் நடத்திய நீர் யானை; பராமரிப்பாளர் பலி
Author: Sudha28 July 2024, 4:49 pm
பகவான் பிர்சா உயிரியல் பூங்கா, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் புறநகரிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிங்கம், புலி, முதலை, நீர் யானை உள்பட பல்வேறு விலங்குகளும், பல்வேறு வகை பறவைகளும் உள்ளன
![](https://ffebb5a0.delivery.rocketcdn.me/wp-content/uploads/2024/07/1000024072.jpg)
இங்குள்ள நீர்யானை ஒன்று சமீபத்தில் குட்டியை ஈன்றது.இந்த நீர் யானையை சந்தோஷ்குமார் என்பவர் பராமரித்து வருகிறார்.
சம்பவத்தன்று பராமரிப்பாளர் சந்தோஷ் குமார் நீர்யானை குட்டியை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். அதனால் நீர்யானை கோபம் கொண்டு சந்தோஷ்குமார் மீது தாக்குதல் நடத்தியது இதில் சந்தோஷ்குமார் பலத்த காயம் அடைந்தார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சந்தோஷ் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.