தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு விழா நடத்துங்க.. மக்களுக்கு மளிகை பொருளையும் கொடுத்துடுங்க : மேனகா நவநீதன் சுளீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 10:08 pm

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இன்று காலை முதலே முன்னிலை வகித்துவந்த, தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரூ.40 லட்சம் மட்டும் செலவு பண்ணி இந்த தேர்தலை அணுகி இருந்தால் திமுக கூட்டணி காங்கிரஸ் காணாமல் போய் இருக்கும்.

நாம் தமிழர் கட்சி மக்களுக்காக நிற்கின்ற கட்சிதான். மக்களது வறுமையை பயன்படுத்தி பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டார்கள்.

வாக்காளர்களுக்கு கொடுத்த ரூ.20 ஆயிரம் பணம் டாஸ்மாக்குக்கு போய்விட்டது. பட்டியில் அடைத்து வைத்ததால் அவர்கள் வேலைக்கும் செல்லவில்லை. இனி கஷ்டப்படுவார்கள்,

தேர்தலுக்கு பிறகு கொடுப்பதாக சொன்ன ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களை மக்களுக்கு கொடுத்து விடுங்கள்.

திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என பாராட்டு விழா நடத்துவார்கள். கூடவே தேர்தல் ஆணையத்திற்கும் சேர்த்து பாராட்டு விழா நடத்துங்கள்.

ஏனென்றால் அவர்கள் இல்லை என்றால் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்காது. ஒவ்வொரு முறையும் நாங்கள் புகார் கொடுக்க சென்றபோது அப்படியா என கேட்ட தேர்தல் ஆணையத்திற்கும் நிச்சயம் பாராட்டு விழா நடத்தணும் என்றார்.

  • Dhanush new movie announcement தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!