விடாமல் வெளுத்து வாங்கும் மழை : சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2022, 10:01 pm

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இரவுநேரத்தில் தொடர்ந்து பல மணிநேரங்கள் கனமழை விடாது பெய்தது.

கனமழையின் காரணமாக சாலையின் ஆங்காங்கே நீர் தேங்கியிருப்பதால் நடந்து பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வானிலை மையமும் மழை 3 மணி நேரத்திற்கு தொடர்ந்து பெய்யும் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) ஒரு நாள் மட்டும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?