தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் நேற்றில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், கரூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, தேனி, கோவை, திண்டுக்கல், திருப்பத்தூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.